ஜனவரி முதலாம் திகதிமுதல் உற்பத்தி செய்யப்பட்டு வெளியிடப்படும் பொருட்களுக்கே 18 வீத வற்வரி பொருந்தும் !

Wednesday, January 3rd, 2024


நாட்டில் நேற்று (01) முதல் நடைமுறைக்கு வந்துள்ள 18 வீத வற் வரியானது, இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் வெளியிடப்படும் பொருட்களுக்கு மாத்திரமே பொருந்தும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அந்தவகையில், 2024 ஆம் ஆண்டுக்கு முன்னர் சந்தையில் வெளியிடப்பட்ட பொருட்களுக்களுக்கு இந்த அதிகரித்த வற் வரி பொருந்தாது என அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

எனவே, இது தொடர்பில் சந்தையில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை தன்னிச்சையாக விலைகளை அதிகரிக்கும் வர்த்தகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடயம் குறித்து பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல கருத்து தெரிவிக்கையில் 

வற் வரியால், நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.

இந்நிலையில் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகள் அதிகரித்துள்ளதுடன், போக்குவரத்துக் கட்டணங்களும் அதிகரித்துள்ளன.

இது நாட்டின் கிராமப்புற மக்களை விட நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரையும், வறிய மக்களையுமே இந்த வரி பாதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: