ஜனநாயக போராட்டங்களுக்கு செவிசாய்க்க அரசாங்கம் தயார் – தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!
Wednesday, July 27th, 2022
ஜனநாயக போராட்டங்களுக்கு செவிசாய்க்க அரசாங்கம் எப்போதும் தயாராக இருந்தாலும் தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (27) விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனநாயக அரசு என்ற முறையில், பொதுமக்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அகிம்சை வழியில் செயல்படும் மக்களின் அகிம்சைக் குரலுக்காக அரசு என்ற முறையில் இணைந்து செயல்படுகிறோம்.
ஆனால் தீவிரவாதத்தை ஏற்க முடியாது. ஜனநாயகத்திற்கு எதிரான பெரும் அச்சுறுத்தலை பயங்கரவாதமாக மாற்றுவதற்கு ஆதரவளிக்க மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பாகிஸ்இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு!
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை ஐக்கிய நாடுகள் மனிதை உரிமை பேரவைக்கு கிடையாது - கல்வ...
இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறையை மட்டுப்படுத்த தீர்மானம் – கல்லி அமைச்சர்!
|
|
|


