ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் இணைத் தலைவர்களாக ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா, பிரபாகணேசன் தெரிவு!
Thursday, May 19th, 2016
ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் இணைத் தலைவர்களாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற குறித்த முன்னணியின் கூட்டத்தின் போதே இணைத் தலைவர்களாக மூவரையும் நியமிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டதாகவும், சிறிது காலத்தின் பின்னர் தலைமைத்துவம் குறித்து முடிவு எடுப்பது என்றும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 4 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்ட ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியில் 11 தமிழ் அரசியல் கட்சிகள் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
தொற்று உக்கிர நிலையை அடைந்தபின் நோயாளர்கள் மருத்துவமனைகளுக்கு வருவதே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் ...
5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்றுமுதல் ஆரம்பம் - பரீட்சைகள் தி...
பச்சை குத்துவதால் எயிட்ஸ் பரவும் அபாயம் - இலங்கை பச்சை குத்துவோர் சங்கம் எச்சரிக்கை!
|
|
|


