சௌபாக்கிய உற்பத்திக் கிராமங்கள் திட்டம் நல்லூரில் அங்குரார்ப்பணம்!
Thursday, July 1st, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” திட்டத்தின் கீழ் கிராமிய தொழிற்துறையை விருத்தி செய்யும் முகமாக “சௌபாக்கிய உற்பத்திக் கிராமங்கள்” உருவாக்கப்பட்டுள்ளன.
இன்றையதினம் இந்த செயற்றிட்டத்தின் தேசிய அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மகிந்த ராஜபக்ச, சௌபாக்கிய உற்பத்திக் கிராமங்களை நிகழ்நிலை தொழில்நுட்பத்தினூடாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் சௌபாக்கிய உற்பத்திக் கிராமங்களில் ஒன்றான நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குற்குட்பட்ட பகுதிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு, சமுர்த்தி தலைமை முகாமையாளர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது பிரத்தியேக தொழில் நடவடிக்கைகளை மன்னெடப்பவர்கள் மாணவர்கள் விவசாயிகள் உள்ளிட்ட பலருக்கு உதவித் தொகைகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர், சமூர்த்தி தலைமைய முகாமையாளர் சமுர்த்தி சங்க உத்தியோகத்தர்கள் கிராம சேவையாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளுடன் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக பொறுப்பாளர் அம்பலம் இரவீந்திரதாசனும் கலந்துகொண்டு உதவித்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


