சோளம் பற்றாக்குறை: திரிபோஷா தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது!

Monday, June 1st, 2020

கம்பஹா மாவட்டம் ஜா-எல பிரதேசத்தில் அமைந்துள்ள திரிபோஷா தயாரிப்பு தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.

திரிபோஷா தயாரிப்பதற்கு தேவையான சோளம் இல்லாத காரணத்தினால், தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கு சேவையாற்றிய சுமார் 300 பேர் வீடுகளில் இருக்கின்றனர். சோளம் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் இரண்டு வாரங்களுக்கு முன்னர் திரிபோஷா தயாரிப்பு நிறுத்தப்பட்டது.

இந்த நிலைமையில், கர்ப்பிணி தாய்மார் மற்றும் குழந்தைகளுக்கு அரசாங்கம் இலவசமாக வழங்கும் திரிபோஷா சத்துணவை எதிர்காலத்தில் வழங்க முடியாது போகும் என தெரியவருகிறது.

அத்துடன் அந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் சுபோஷா சத்துணவுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதுடன் மாதாந்தம் 7 மில்லியன் ரூபாவுக்கு அவை விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

Related posts:

கொரோனாத் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் திங்கள்முதல் நாடுமுழுவதும் இறுக்கமான நடைமுறை - இராணுவத் ...
எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னதாக பொதுமக்களின் ஆலோசனைகளை வழங்கலாம் - ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிப...
தெற்காசியாவில் 76 சதவீதமான சிறார்கள் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றனர் - யுனிசெஃப் அறிக்கையில...