சோளத்தை 160 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய கால்நடை உற்பத்தியாளர் இணக்கம் – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

இந்தப் பருவத்தில் விவசாயிகளால் பயிரிடப்படும் சோளத்தை ஒரு கிலோகிராம் 160 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய கால்நடை உற்பத்தியாளர்கள் இணங்கியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது
இப்பருவத்தில், 65 ஆயிரம் ஹெக்டேர் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு, 135,000 மெட்ரிக் தொன் அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 2023ஆம் ஆண்டு வசந்த மற்றும் கோடை காலங்களில் 130,000 ஹெக்டேர்களில் பயிரிடத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் அறுவடை 03 லட்சம் மெட்ரிக் தொன் ஆகும். இலங்கையின் வருடாந்த சோளத் தேவை 05 இலட்சம் மெற்றிக் தொன்களை அண்மித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஓய்வு பெற்ற 50 படை வீரர்கள் பேருக்கு தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்!
பத்து மில்லியன் ரூபா செலவில் அளவெட்டித் தபாலகம் நிர்மாணம்!
மேலும் 4 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச சேவையில் வேலை வாய்ப்பு!
|
|