சைட்டம் கல்லூரி: புதிதாக மாணவர்களை இணைத்துக்கொள்வது இடைநிறுத்தம்!

Saturday, September 16th, 2017

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு புதிதாக மருத்துவ மாணவர்களை இணைத்துக்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது

அறிக்கையொன்றினூடாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகாண நியமிக்கப்பட்ட பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

இதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை அல்லது மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்டதிட்டங்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்படும் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம், விசேட கல்லூரிகள் சட்டத்தின் 70வது பிரிவின் கீழ் உயர்கல்வி, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளரால், மாலபே தனியார் கல்லூரிக்கு நேற்று அறிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது

இதேவேளை, குறித்த குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள ஏனைய முன்மொழிவுகள் தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடி மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கமைய நடைமுறைப்படுத்த அரசாங்கம் முடிவுசெய்துள்ளது

அத்துடன், பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவின் தலைமையிலான குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை விரைவில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts: