சேவை அத்தியவசியத்தின் அடிப்படையில் உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் – பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு!
Sunday, October 11th, 2020
உடன் அமுலுக்கு வரும் வகையில் உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் சேவை அத்தியவசியத்தின் அடிப்படையில் பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 8 பேர், சிரேஷ்ட அதிகாரி ஒருவர், பொலிஸ் அத்தியட்சகர்கள் ஒருவர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண பொலிஸ் ஊடக பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் காலி மாவட்டத்திற்கான பிரதி பொலிஸ்மா அதிபர் கே.என்.ஜே வெதசிங்க மேல் மாகாணத்தின் வடக்கு பிரிவின் பதில் பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் பொலிஸ் ஊடக பேச்சாளராக இருந்த ஜாலிய சேனாரத்ன காங்கேசன்துறை பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


