சேவையை புறக்கணித்தால் கடும் நடவடிக்கை – சுகாதார அமைச்சர் ராஜித!

Monday, October 2nd, 2017

முன் அறிவிப்பின்றி சேவை புறக்கணிப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஈடுபட்டால், அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி சம்பந்தமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என கோரி முன் அறிவிப்பின்றி சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அண்மையில் கூறியிருந்தது.

இந்த நிலையில், சுகாதார அமைச்சர் கடும் நடவடிக்கை குறித்து குழப்பமடைய தேவையில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று தெரிவுக்குழுவின் உறுப்பினர் மருத்துவர் பிரசாத் கொழம்பகே குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ற தொழிற்சங்கம் அரசியல் காரணங்களுக்காக அடிக்கடி சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டு அப்பாவி நோயாளிகளை சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: