சேவையில் இருந்து நீக்கப்பட்ட 200 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் சேவையில் – பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் விசேட நிகழ்வு!

Saturday, February 10th, 2024

சேவையில் இருந்து நீக்கப்பட்ட 200 பேருந்துகளை புதுப்பித்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தை அண்மித்த ஜப்பான் நட்புறவு வீதிக்கு அருகில் குறித்த நடவடிக்கை இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள 107 இலங்கை போக்குவரத்து சபை சாலைகள் மற்றும் 11 பிராந்திய வேலைத்தளங்களைச் சேர்ந்த பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் இந்தப் பேருந்துகளை புதுப்பித்துள்ளனர்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி, சாமர சம்பத் தசநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


தமிழ் மக்கள் மத்தியில் நிகழும் அரசியல் மாற்றமே தமிழ் மக்களது அரசியல் தலைவிதியை மாற்றியெழுதும் - ஈ.பி...
வடக்கின் கல்வித்தரம் வீழ்ச்சிக்கு மாகாண சபையின் வினைத்திறன் அற்ற ஆட்சியாளர்களே காரணம் – வடக்கு மாகாண...
எதிர்வரும் காலங்களில் புகையிரத பருவச்சீட்டை இரத்து செய்வதற்கு யோசனை - அதிகார சபையாக மாற்றப்பட்டால் ந...