சேனா படைப்புழுவால் பழச்செய்கைக்கு தாக்கம் ஏற்படவில்லை!

Monday, January 28th, 2019

சேனா படைப்புழுவினால் பழச்செய்கைக்கு தாக்கம் ஏற்படவில்லை என ஹொரணை பழச்செய்கை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட பரிசோதனைகளின்போதே இது உறுதிப்படுத்தப்பட்டதாக, நிறுவனத்தின் பணிப்பாளர் ஈ.ஆர்.எஸ்.பி. எதிரிமான்ன குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அனைத்துப் பகுதிகளிலும் ஆராய்ந்துள்ளதுடன், தொடர்ந்தும் ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு பழச்செய்கைக்கு ஏதும் தாக்கம் ஏற்பட்டிருப்பின் அது குறித்து 1920 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் அதனைத்தவிர, நிறுவனத்தின் 034 2261323 என்ற தொலைபேசி இலக்கங்களிற்கும் அழைத்து அறிவிக்க முடியும் எனவும், ஹொரணை பழச்செய்கை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, படைப்புழுவினால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர தெரிவித்துள்ளார்

இதன்படி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 40,000 ரூபா வரை இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts: