சேத மதிப்பீடுகள் தொடர்பில் பரப்பப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. – தொல்பொருள் சேதம் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு!

Tuesday, July 26th, 2022

ஜனாதிபதி மாளிகையிலுள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை சேதமாக்கியமை தொடர்பில் நாளைய தினம்(27) விசாரணை நடத்தப்படும் என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விசாரணைகளுக்காக மேல் மாகாண பிராந்திய அலுவலக அதிகாரிகளைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகையின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சேதங்கள் தொடர்பிலான விசாரணைகள் இதுவரை நிறைவு செய்யப்படவில்லை எனவும் சேத மதிப்பீட்டு நடவடிக்கைள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே சேத மதிப்பீடுகள் தொடர்பில் பரப்பப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை.

அதற்கமைய, ஜனாதிபதி மாளிகையில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொண்டதன் பின்னர், சேத விபரங்கள் தொடர்பில் தயாரிக்கப்படும் அறிக்கையானது ஜனாதிபதியின் செயலாளர், பொலிஸார் மற்றும் ஏனைய பாதுகாப்பு பிரிவினரிடம்  கையளிக்கப்படும் என அவர்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: