சேதம் இழைத்தவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – பிரதி பொலிஸ் மாஅதிபர்!

Saturday, June 24th, 2017

பல்கலை  மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் அரச சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றி கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகபேச்சாளரும் பிரதிபொலிஸ் மாஅதிபருமான பிரியந் ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

பாரபட்சமின்றி சகல நடவடிக்கைகளுக்கும் எடுக்கப்பட்டு, சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றி தற்சமயம் மதிப்பீடு செய்யப்படுவதாக தெரிவித்தனர்.நீதிமன்றத்தின் உத்தரவை மீறி பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அரச நிறுவனங்களின் வளாகத்திற்குள் நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது பாரிய குற்றமாகும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா பிறியந்த ஜயக்கொடி சுட்டிக்காட்டியுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தனிநபர் ஒருவருக்கோ தனிப்பட்ட குழுக்களுக்கோ சட்டத்தைக் கையில் எடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

Related posts:


வல்வெட்டித்துறை பொலிஸார் தாக்கினர் என்று குற்றச்சாட்டு - படுகாயமடைந்துள்ள இருவர் மருத்துவமனையில்!
நாட்டின் முக்கிய வீதிகளை அபிவிருத்தி செய்ய திட்டம் - அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!
இருதரப்பு ஒப்பந்தங்கள் பல கைச்சாத்து - பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் சீன அரசாங்கத்துடன் நெருக்கமாக...