சேதன உரத்தை பயன்படுத்தி வெற்றிகரமாக விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!
Friday, January 28th, 2022
அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள சேதன உரத்தை உரியவாறு பயன்படுத்தி, விவசாயிகள் பிரச்சினைகளின்றி விவசாய நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
களுத்துறை – பண்டாரவளை பிரதேசத்தில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சேதன உரத்தைப் பயன்படுத்தியமையால் சிறிதளவான விவசாயிகளுக்கு விளைச்சல் குறைவடைந்துள்ளதென விவசாயிகள் சுட்டிக்காட்டியதாகவும் அவர் தெரிவிதுள்ளார்.
எவ்வாறிருப்பினும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள நனோ திரவ உரம் மற்றும் சேதன உரத்தை பயன்படுத்தியமையால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ் மாநகரசபை அசமந்தம்: வாய்க்காலைப் புனரமைக்குமாறு குருநகர் பகுதி மக்கள் கோரிக்கை!
எவர்தான் ஆட்சிக்கு வந்தாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை சடுதியாக மாற்றமுடியாது – நாடாளுமன்ற உற...
அரச விடுமுறை - அத்தியாவசிய சேவைகளுக்கு தடையாகக் கூடாது - பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட...
|
|
|
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில்தாளமுக்கம் - கடும் மழை, காற்று, கடல் கொந்தளிப்பு ஏற்படும் என வானிலை அ...
புதிய திட்டங்களை போக்குவரத்து அமைச்சு தயாரித்து அதனை துரிதமாக செயற்படுத்த வேண்டும் – ஜனாதிபதி கோட்டா...
இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவு - அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் ...


