செழிப்பான நாளை வளமான தாய்நாடு’ – இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட தீர்மானம் – இராஜாங்க அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன!
Thursday, December 24th, 2020
2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொரோனா சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய இந்த முறை தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற தேசிய சுதந்திர தின கொண்டாட்ட ஏற்பாடுகளின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி ‘செழிப்பான நாளை வளமான தாய்நாடு’ என்ற தொனிப்பொருளில், தேசிய சுதந்திர தின வைபவத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சுதந்திர தின கொண்டாட்ட பேரணியில் 4 ஆயிரத்து 325 இராணுவத்தினரும், 868 கடற்படையினரும், 945 வான் படையினரும், ஆயிரத்து 382 காவல்துறையினரும், 515 சிவில் பாதுகாப்பு படையினரும், மாணவ வீரர்கள் 355 பேரும் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


