செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் 60 ஆவது அகவை பூர்த்தியை முன்னிட்டு நல்லூரில் மாபெரும் சிரமதானம்!

நல்லூர் மகாத்மா ஜீ சனசமூக நிலைய இளைஞர்களால் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் 60 ஆவது அகவை பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் சிரமதான பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்றுகாலைமுதல் திருநெல்வேலி கலாசாலை வீதி ஒழுங்கை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட குறித்த சிரமதான பணிகளை அப்பகுதியின் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் பெரியவர்கள் என பலர் கலந்துகொண்டு முன்னெடுத்திருந்தனர்.
இந்த சிரமதான நிகழ்வை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டு சிரமதான பணிகளை ஆரம்பித்து வைத்ததுவைத்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் வான்பரப்பில் பயணித்த சர்வதேச விண்வெளி நிலையம்!
கட்சித் தலைவர்களுடனான விசேட கூட்டம் சபாநாயகர் தலைமையில் !
ஊழியர் சேமலாப நிதிய விவகாரம் - தற்போது கிடைக்கும் 9% நலன் அதன் உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்...
|
|