சென்சோ இயந்திரத்துக்கு கட்டாய அனுமதிப் பத்திரம்!

Wednesday, February 13th, 2019

மரம் வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் சென்சோ இயந்திரத்துக்கு அனுமதிப் பத்திரம் பெறுவதை கட்டாயமாக்கும் சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் இயந்திரத்தை முன்னிலைப்படுத்தி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும். அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் சென்சோ இயந்திரங்களை வைத்துள்ளவர்கள் தொடர்பிலான பெயர் பட்டியல் பேணப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதிப் பத்திரம் இன்றி இயந்திரத்தைப் பயன்படுத்துபவர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Related posts: