சூறாவளி தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் – மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தல்!

Thursday, May 13th, 2021

சவுதி அரேபிய கடற்பரப்பில் தென்கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட தாழ் அமுக்கம் காரணமாக சூறாவளி தாக்கம் உருவாகியுள்ளது.

அடுத்து வரும் சிலதினங்களில் இந்தத்தாக்கம் தீவிரம்பெற்று இலங்கையின் வடக்கு மேற்கு நோக்கி கடக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளைமுதல் இந்தத் தாழமுக்கம் மேலும் தீவிரமடையலாம். தீவிரம் பெற்ற சூறாவளி இலங்கையின் வடக்கு மேற்கு நோக்கி திசையூடாக கடக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால், அடுத்து வரும் சில தினங்களில் காங்கேசன்துறையில் இருந்து மன்னார் வரையும், கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையும் உள்ள கரையோரப்பிரதேசங்களில் கடல் சற்றுக் கொந்தளிப்பாக இருக்கும் என அறிவிக்கப்படுகின்றது.

இந்த நாட்களில் குறிப்பிட்ட பிரதேசங்களில் கடற்றொழில் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்  அவதானத்துடன் செயல்பட வேண்டும் என திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்சமயம் இந்தக் கடற்பரப்புக்களில் கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு வரும்படி திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts:

கொரோனா தொடர்பில் வெளியிடும் தரவுகள் அனைத்தும் மிகச் சரியானவை - என சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
நல்லாட்சியால் ஏமாற்றப்பட்ட வீட்டுத் திட்ட நிதியை முழுமையாக வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் போராட்ட...
ஜனநாயக முறையை மறுப்பதாயின் அதன் பயங்கரமான கடந்தகால வரலாற்றையும் புரிந்துகொள்ள வேண்டும் - பிரதமர் மஹ...