சூறாவளியால் கவிழ்ந்தது இழுவைப் படகு – ஐந்து மீனவர்கள் மாயம் – மீனவர்களை தேடுமாறு கடற்படையினருக்கு அறிவிப்பு!

திருகோணமலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பல நாள் இழுவை படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானநிலையில் படகோட்டி உட்பட ஐவர் காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது.
“சஸ்மி துவா 02” என்ற இழுவைப்படகே ஆழ்கடலில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக கவிழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி திருகோணமலையில் இருந்து குறித்த படகு புறப்பட்டு சென்றுள்ளது.
இன்நிலையில் காணாமல் போன மீனவர்களை தேடுமாறு கடற்படையினருக்கு அறிவித்துள்ளதாக கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஆயுள்வேத மருந்தகத்தை கெற்பேலிக்கு மாற்றுமாறு கோரிக்கை!
இலங்கைக்கு உதவுமாறு பல நாடுகளிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் பரிந்துரை - வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்...
வெப்ப அதிகரிப்பு - குழந்தைகளுக்கு காய்ச்சலால் நீர்ச்சத்து குறைய வாய்ப்புள்ளதாக விசேட வைத்திய நிபுணர்...
|
|