சூரியகாந்தி செய்கையினை விரிவாக்குங்கள் – இலங்கையின் விவசாயத் துறையின் மேம்பாட்டிற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு!

இலங்கையில் விவசாயத் துறையை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்திற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அமைச்சர் மஹிந்த அமரவீர, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தப் பேச்சுவார்த்தை கடந்த 3ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது 60 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இலங்கைக்கு வழங்குவதற்கு இந்தியப் பிரதமர் அனுமதி வழங்கியுள்ளார் என தெரிவித்திருந்த இந்திய உயர்ஸ்தானிகர் ஓமானிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் உரத்தையே இலங்கைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சூரியகாந்தி செய்கையினை விரிவாக்குமாறும் இந்திய உயர்ஸ்தானிகர் கேட்டுக்கொண்டார்.
இதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் வர்த்தக உதவிகளை வழங்குவதற்கு இந்தியா தயாராகியுள்ளது.
சூரியகாந்தி எண்ணெய்க்கு சர்வதேச சந்தையில் அதிக கிராக்கி நிலவுகிறது. இலங்கையில் சூரியகாந்தி செய்கைக்கு பொருத்தமான காலநிலை நிலவுவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|