சுவிட்ஸர்லாந்தில் இலங்கை தமிழர் படுகொலை!
Friday, October 28th, 2016
சுவிட்ஸர்லாந்தின் சொலத்தூண் மாநிலத்தில் நேற்று முன்தினம் இரு தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
சுவிஸ்வாழ் இலங்கை தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கம் நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மதியம் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த சம்பவத்தில் வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான கார்த்திக் பாலேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சுவிட்ஸர்லாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts:
கால அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும்!
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இலங்கை வருவதில் தாமதம் ஏற்படாது - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!
இந்தியாவுடன் புதிய ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி!
|
|
|


