சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுப்பதற்கு இலக்கை நிர்ணயித்தது இலங்கை சுற்றுலாத்துறை!

Tuesday, June 27th, 2023

ஜூன் மாதத்தில் 87,521 சர்வதேச பார்வையாளர்களை கவர்ந்திழுப்பதை சுற்றுலாத்துறை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், தனது இலக்கில் 70 வீதத்தை இலங்கை பூர்த்தி செய்துள்ளது.

அதன்படி, நாடு குறித்த இலக்கை அடைய ஜூன் 21ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 26,338 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தர வேண்டும்.

அதற்கு நாளாந்தம் 2,633 பேர் நாட்டிற்கு வருகை தரவேண்டும் என தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஜூன் மாதம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 585,669 சுற்றுலா பயணிகள் வரை நாட்டுக்குள் வருகை தந்துள்ளதோடு ஜூன் மாதத்தில் இதுவரையிலான நாளாந்த வருகை சராசரியாக 3,059 ஆக பதிவாகியுள்ளது.

அதற்கமைய, குறித்த காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதோடு ஜூன் மாதத்தில் மொத்த வருகையில் 28 வீதமானோர் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளார்கள்.

இரண்டாம் இடத்திலுள்ள ரஷ்யாவில் இருந்து 9 வீதமானோர் வருகை தந்துள்ள நிலையில் மூன்றாவது இடத்தில் உள்ள ஐக்கிய இராச்சியத்திலிருந்து 7 வீதமானோர் வருகை தந்துள்ளார்கள்.

மேலும், தரவரிசையில் அவுஸ்திரேலியா நான்காவது இடத்திலும், சீனா ஒரு தரவரிசை முன்னேறி ஐந்தாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: