சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு சலுகை – சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு!

Thursday, March 24th, 2022

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்கள் ஊடாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு, அவசர தேவைகளில் ஒன்றாகக் கருதி எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு அறிவித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சிரமங்களுக்கு உள்ளான சுற்றுலா பெருந்துகளுக்கு டிப்போக்களின் ஊடாக எரிபொருள் வழங்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் சுற்றுலா பஸ்களுக்கு மாத்திரமே இந்த எரிபொருள் வழங்கப்படுகிறது.

அதன்படி, மீதொட்டமுல்ல, ஜா-எல, அனுராதபுரம், கண்டி, தம்புள்ளை, நுவரெலியா மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய டிப்போக்கள் ஊடாக சுற்றுலா பஸ்களுக்கு எரிபொருள் நிரப்பும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பஸ்களுக்கான எரிபொருளை வழங்கும்போது அந்த சந்தர்ப்பத்திலேயே அதற்கான பணத்தை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

இலங்கையில் ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத 450,000 குடும்பங்கள் - மின்சார நுகர்வோர் சங்கத்தி...
பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் கரிசனை - அனைத்து மக்களுக்கும் நிவாரணம் - ஜனாதிபதி ரணில் விக...
நாட்டில் கை, கால் மற்றும் வாய் தொடர்புடைய நோய்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு -  குழந்தை நல மருத்து...

புத்தூரில் வயோதிபப் பெண் உயிரிழப்பு: மழையில் நனைந்த வெங்காயம் உலர்த்தும் போது வீபரீதம்  
இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை விலக்கிக்கொள்ள மாட்டார்கள் என்றே நம்புகின்றோம் - பொதுமக்க...
அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப செயற்படுங்கள் – மீண்டுமொரு தாழமுக்கம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்க...