சுற்றுலா நியதிச்சட்டம் தொடர்பிலான நிலைப்பாட்டைக் கோரும் மாகாண சபை!

Friday, May 5th, 2017

 

வடக்கு மாகாணத்துக்குரிய சுற்றுலா நியதிச்சட்டம் தொடர்பில் குறித்த மாகாணசபை நாடாளுமன்றத்தின் நிலைப்பாட்டைக் கோரியுள்ளது  தொடர்பான அறிவித்தல் தனக்கு கிடைத்துள்ளது என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சபாநாயகர் அறிவிப்பு வேளையிலேயே, நிலையியல் கட்டளையின் கீழ் தான் இந்த அறிவிப்பை விடுப்பதாக அவர் குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், இந்த அறிவித்தல் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும். அத்துடன், நியதிச்சட்ட வரைபின் பிரதி எம்.பிக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் இதன்போது கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: