சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகளுள் இலங்கை – ஃபோர்ப்ஸ் நாளிதழ் அறிக்கை!

Sunday, July 28th, 2024

சுற்றுலா செல்வதற்கான சிறந்த முதல் மூன்று நாடுகளுள் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது.

ஃபோர்ப்ஸ் நாளிதழின்படி, 2024ஆம் ஆண்டில் கோடைக் காலத்தில் சுற்றுலா செல்வதற்காக கிரீஸ் , மொரிஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உலகின் சிறந்த சுற்றுலா நாடுகளாக பெயரிடப்பட்டுள்ளன.

இலங்கை மேடு பள்ளங்களுடன் மற்றும் கண்கவர் கடற்கரைகளுடன் காணப்படக்கூடிய தீவாக உள்ளதுடன் ஒப்பீட்டளவில் பாலி நாட்டைப் போன்ற ஈர்ப்பைக் கொண்டது.

இதேவேளை, சுற்றுலாப் பயணிகளுக்காக அதிசொகுசு ரீதியிலான வசதிகள் இலங்கையினுள் காணப்படுகிறது. இயற்கை அழகை கண்டுகளிக்கும் விதத்தில் 22 தேசிய பூங்காக்கள் உள்ளதாகவும் ஃபோர்ப்ஸ் நாளிதழ் கூறுகிறது.

அதனுடன், கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மைய நிலமைகளால் மீள எழுந்திருக்கும் இலங்கை இவ்வாண்டில் சுற்றலாவுக்கான சிறந்த நாடுகளுள் முன்னணியில் உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

000

Related posts: