சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக ஜொஹான் ஜயரத்ன, சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக கடமையாற்றி வந்த கிஷூ கோமஸ் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு, புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், இலங்கையின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு அலுவலகம் முகங்கொடுத்துள்ள சவாலுக்கு முகங்கொடுப்பதற்காகவும் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
தமிழர்களின் அனைத்துவகைப் பின்னடைவுகளுக்கும் சரியானஅரசியல் தலைமைஅமையாமையேகாரணமாகும் அனைத்துத் தமிழ்க்...
மீண்டும் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டம்? - வெளியாகியுள்ள எச்சரிக்கை கடிதம்!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு!
|
|