சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் எவ்வளவு டொலர்களை செலவிடுகிறார்கள் என்பதைக் கண்காணிக்க முறையான வழிமுறை உருவாக்கப்பட வேண்டும் !
 Tuesday, July 1st, 2025
        
                    Tuesday, July 1st, 2025
            
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் எவ்வளவு டொலர்களை செலவிடுகிறார்கள் என்பதைக் கண்காணிக்க ஒரு முறையான வழிமுறை உருவாக்கப்பட வேண்டும் என சர்வஜன அதிகாரத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
இன்று (30) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய திலித் ஜயவீர, சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்தாலும், அவர்கள் நாட்டில் செலவிடும் டொலர்களைக் கண்காணிக்க எந்த முறைமையும் இல்லை என்று குறிப்பிட்டார்.
குறைந்தளவில் செலவிடும் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஊடாக இலங்கை மக்கள் மீது பெரும் சுமை சுமத்தப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர இதன்போது சுட்டிக்காட்டினார்.
அதன்படி, இதற்கு தீர்வாக உடனடியாக டிஜிட்டல் அடையாள எண் வழங்கப்பட வேண்டும், மேலும் சுற்றுலாப் பயணிகள் செலவிடும் செலவினங்களை கண்காணிக்க விரைவில் திட்டமொன்றை வகுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
00
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        