சுற்றுலாத் துறை மூலம் 33 கோடியே 80 லட்சம் ரூபா வருமானம்!
Monday, July 22nd, 2019
நடப்பாண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில், சுற்றுலாத் துறை மூலம் பெறப்பட்ட வருவாய் 33 கோடியே 80 லட்சம் ரூபா என பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 0.8 சத வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதேவேளை, இந்த வருடத்தின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 10 லட்சத்து 8 ஆயிரத்து 449 ஆக உயர்ந்திருந்தது.
இதற்கு முந்திய வருடத்தில், முன்னர் எப்போதும் இல்லாத வகையில் 11 லட்சத்து 64 ஆயிரத்து 647 பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.
கடந்த வருட எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இந்தைய வருட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13.4 சத வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
|
|
|


