சுற்றுலாத்துறை தூதுவராக முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரிய நியமனம்!

Saturday, August 6th, 2022

இலங்கையின் சுற்றுலாத்துறை தூதுவராக முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். புதிய சுற்றுலா ஆலோசனைக் குழுவுடன் இணைந்து நியமனத்தை அறிவிக்கும் சிறப்பு நிகழ்வு நேற்றிரவு (04.08.2022) இடம்பெற்றது.

சனத் ஜயசூரிய உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர், மேலும் அவர் தானாக முன்வந்து, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவுகளை இலக்காகக் கொண்ட இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வுகளில் ஒரு பகுதியாக இருக்க ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விமான்கள் பலரின் பங்களிப்புடன் சுற்றுலா ஆலோசனை சபையொன்று உருவாக்கப்பட்டு, அந்த ஆலோசகர்களுக்கான நியமனங்கள் உத்தியோகபூர்வமாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமையில் நேற்று இரவு கொழும்பில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: