சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் மதுபானசாலைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க அரசாங்கம் ஆலோசனை!

Friday, December 1st, 2023

இலங்கையில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எடுத்துவரும் பல்வேறு முயற்சிகளில் ஒரு தீர்மானமாக மதுபானசாலைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க அரசாங்கம் ஆலோசனைகளை நடத்தியுள்ளது.

இலங்கையில் தற்போது காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை மதுபானசாலைகள் திறக்கப்படுகிறது.

இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் டயான கமகே முதல் அரசாங்கத்தின் முக்கிய நபர்கள் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் இரவு சுற்றுலாவை அபிவிருத்தி செய்ய மதுபான சாலைகளை இரவில் அதிக நேரம் திறந்துவைக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

என்றாலும், இந்தக் கோரிக்கைக்கு கடுமையான எதிர்ப்புகளும் கடந்தகாலத்தில் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், இன்று இடம்பெற்ற கலால் திணைக்கள பரிசோதகர்களின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, மதுபானசாலைகள் திறக்கப்படும் நேரத்தை அதிகரிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக கூறினார்.

இரவு ஒன்பது மணிமுதல் மேலும் பல மணிநேரம் மதுபான சாலைகள் திறந்துவைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: