சாவகச்சேரி பிரதேச சபையிலும் ஈ.பி.டி.பியின் அதரவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி!

Thursday, April 5th, 2018

சாவகச்சேரி பிரதேச சபையினையும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

31 உறுப்பினர்களை கொண்ட சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 13 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 ஆசனங்களையும் ஈ.பி.டி.பி 4 ஆசனங்களையும் சிறிலங்கா சுதந்திர கட்சி 3  ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 2 ஆசனங்களையும் தமிழர் விடுதலை கூட்டணி 2 ஆசனங்களையும் சுயேட்சைக்குழு 1 ஆசனத்தையும் பெற்றுள்ளனர்

தவிசாளரை தெரிவு செய்வதற்கான முதலாவது அமர்வு வடமாகாண உள்ளூராட்சி ஆணையளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சார்பில் க.வாமதேவன் பிரேரிக்கப்பட்டதுடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் க.சதீஸ்வரன் தவிசாளர் வேட்பாளராக பிரேரிக்கப்பட்டார்

பகிரங்கமாக இடம்பெற்ற தவிசாளருக்கான வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் பிரேரிக்கப்பட்ட க.வாமதேவன் 23 வாக்குகளை பெற்று தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் அவரை எதிர்த்து போட்டியிட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் 6 வாக்குகளை பெற்றார்

இதைத்தொடர்ந்து இடம்மெற்ற உப தவிசாளர் தெரிவன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் செல்வரத்னம் மயூரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்

Related posts: