போலி ஆவணங்கள் மூலம் பணம் வசூலித்தவருக்கு 6 மாத சிறை!

Friday, April 1st, 2016

யாழ்.பல்கலைகழக மாணவர் மருத்துவ கழகம் என பொய்யான ஆவணம் தயாரித்து பொதுமக்களை ஏமாற்றி பணம் வசூலித்த கிளிநொச்சி பகுதியை சேர்ந்த இளைஞனுக்கு 8 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாதகால சிறைத்தண்டனை விதித்து மல்லாகம் மாவட்ட மேலதிக நீதிவான் ரீ.கருணாகரன் நேற்று (31) தீர்ப்பளித்தார்.

கடந்த ஜனவரி 4 ஆம் திகதி நீர்வேலி மற்றும் சிறுப்பிட்டி மத்தி பகுதியிலுள்ள வீடுகளுக்குச் சென்ற மேற்படி இளைஞன்இ யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர் மருத்துவ கழகம் என பொய்யான ஆவணங்களைக் காட்டி பண வசூலிப்பில் ஈடுபட்டார்.

குறித்த இளைஞன் மீது சந்தேகம் கொண்ட பொதுமக்கள் ஆவணங்களை வாங்கி பரிசீலித்து பார்த்த போது அவை போலியென்பது தெரியவந்தது. இளைஞனை குறித்த நபரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் நையப்புடைத்த பின்னர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

Related posts:

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை இம்மாதத்துடன் நிறைவு!
யாழ். மாவட்டத்தில் இதுவரை பதிவு மேற்கொள்ளாத வாக்காளர்களைப் பதிவு செய்யுமாறு மாவட்ட அரசாங்க அதிபரினால...
எவர்தான் ஆட்சிக்கு வந்தாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை சடுதியாக மாற்றமுடியாது – நாடாளுமன்ற உற...