சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது!

2011ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபரின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஐ.எம். பண்டார கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளைச் சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் வாவி ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு : பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள்!
இன்று உலக சனத்தொகை தினம்!
நாடு முடக்கப்படும் என்ற செய்தியில் எந்த உண்மையும் கிடையாது - இராணுவத் தளபதி அறிவிப்பு!
|
|