சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி வாழ்த்து!
Sunday, February 4th, 2018
இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனப்பூர்வமாக வாழ்த்து தெரிவிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதிக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த வாழ்த்துச்செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் இலங்கை நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியான ஆட்சி என்பவற்றை சிறப்பாக முன்னெடுத்துவருகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனப்பூர்வமாக வாழ்த்து தெரிவிக்கின்றேன்.
தற்போதைய ஜனாதிபதியின் தலைமையில் இலங்கை நல்லிணக்கத்தினதும் சுபீட்சத்தினதும் நோக்கங்களை உறுதியாக அடைந்துகொள்ளும் என்றும் அமெரிக்கா ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மரக்கறிகளின் விலை அதிகரிப்பு
இணையவழி மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்படாது - இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவிப்பு!
எரிபொருளை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கினால் வாகனங்களுக்கான எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் ...
|
|
|
ஏனைய பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் எமது பகுதி மாணவர்களுக்கும் வேண்டும் - ஈ.பி.ட...
ஹட்டன் நகரிலுள்ள 3 ஆயிரத்திற்கும் அதிகமான குடிசை வீடுகளை அகற்றி நிரந்தர வீடுகளை அமைக்க பிரதமர் நடவடி...
வலுவான மற்றும் நீடித்த மீட்சியை அடைவதற்குமான திட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் - அமெரிக்க திறைசே...


