சுட்டெரிக்கும் எல் நீனோவைத் தொடர்ந்து மூழ்கடிக்க வருகிறது லா நீனா!

Sunday, May 1st, 2016
ஆசிய நாடுகளை வாட்டியெடுத்து வரும் வெப்ப சலனத்தின் (எல் நீனோ) தாக்கம் இந்த ஆண்டு மத்தியில் குறைந்தாலும், அதனைத் தொடர்ந்து வரும் “லா நீனா’ சலனம் காரணமாக பலத்த மழையும், வெள்ளப்பெருக்கும் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஆண்டு தொடங்கிய வெப்ப சலனம் காரணமாக பிலிப்பின்ஸ், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வரலாறு காணாத கடும் வெப்பம் நிலவியது. உலகில் மிக அதிக அளவு நெல் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான வியட்நாமில், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பஞ்சம் நிலவுகிறது.
இந்தியாவில், 33 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்படும் அபாயம் நிலவுகிறது. சீனாவில் உற்பத்தியாகி, 6 தெற்காசிய நாடுகள் வழியாக ஓடும் மேகாங் ஆற்றில், கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர் குறைந்து போனது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் வறட்சியும், உணவுப் பஞ்சமும் ஏற்பட்டது.
இந்த நிலையில், வெப்ப சலனத்தின் தாக்கம் இந்த ஆண்டு மத்தியில் குறைந்து விடும் என்று கூறும் விஞ்ஞானிகள், அதனைப் பின்தொடர்ந்து “லா நீனா’ என்ற குளிர் சலனம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர்.
“லா நீனா’ காரணமாக, கடுமையான மழையும், வெள்ளப்பெருக்கும் ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால், ஏற்கெனவே வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயம், மேலும் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது

Related posts: