சுட்டு வீழ்த்தப்படும் – ட்ரோன் கருவிகள் தொடர்பில் விமானப்படை எச்சரிக்கை!
 Wednesday, May 8th, 2019
        
                    Wednesday, May 8th, 2019
            
தடையை மீறி பறக்கும் விமானியில்லா விமானங்கள், ட்ரோன் கருவிகள் சுட்டு வீழ்த்தப்படும் என்று விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் கிகான் செனிவிரத்ன எச்சரித்துள்ளார்.
இலங்கை வான்பரப்பில், விமானியில்லா விமானங்கள், ட்ரோன் கருவிகள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன் கருவிகள் பறக்க விடப்படுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இதனை யாரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
தடையை மீறிப் பறக்கும் ட்ரோன் கருவிகள், விமானியில்லா விமானங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்.” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையிலும், அண்மைய நாட்களில் கொழும்பு நாரஹேன்பிட்டிய பகுதியிலும், காங்கேசன்துறை பகுதியிலும் ட்ரோன் கருவிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.
அவற்றின் மீது படையினரும் காவல்துறையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர். எனினும் அவை தப்பிச் சென்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        