சுங்க திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை இணையத்தில் ஏலம் விடுவதற்கு விசேட ஏற்பாடு – பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
Saturday, September 23rd, 2023
எதிர்வரும் டிசம்பர் மாதம்முதல் இலங்கை சுங்க திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை இணையத்தில் ஏலம் விடுவதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஒருகொடவத்த பகுதியில் உள்ள சுங்க முனையத்திற்கு நேற்றைய தினம் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் 18 ஆயிரத்து 765 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனூடாக அரசுக்கு 14 கோடி ரூபா வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
எந்த தேர்தலையும் எதிர்கொள்ள தேர்தல் ஆணைக்குழு தயார் !
நெடுந்தீவில் சேவையாற்ற மருத்துவர்கள் பின்னடிப்பு!
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு – வழிமுறைகளை இறுக்கமாக அனுசரிக்குமாறு பொதும...
|
|
|


