சுகாதார நடைமுறை பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து உரிய தரப்பினர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் – அமைச்சர் பசில் ராஜபக்ச வலியுறுத்து!

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சுகாதார நடைமுறை பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து உரிய தரப்பினர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என கொவிட் தடுப்புக்கான விசேட செயலணியின் தலைவர் பசில் ராஜிபக்ச தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்புக்கான விசேட செயலணி இன்று முற்பகல் கூடிய போதே இந்த விடயம் தெரிவித்துள்ளார்.
மேலும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர், மக்கள் ஒன்று கூடும் பட்சத்தில், கொரோனா மீண்டும் பரவும் அபாயம் உள்ளது.
இதனால், சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து உரிய தரப்பினர், அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார தரப்பினரிடம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பொலிஸ் அதிகாரிகள் 13 பேருக்கு உடனடி இடமாற்றம்!
தங்கத்தின் விலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்!
ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!
|
|