சுகாதார அமைச்சின் கீழ் அமைக்கப்படும் கட்டடங்களுக்கான இடத்தெரிவில் அனுமதி பெறப்படவேண்டும்!

வடக்கு மாகாணத்தில் சுகாதார அமைச்சின் கீழ் புதிய கட்டடங்களுக்கான இடத்தைத் தெரிவு செய்யும்போது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று துறை சார்ந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
வடக்கு மாகாணத்தில் மக்களின் தேவைகள் கருதி, புதிய கட்டடங்கள் புதிய இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. கால்நடை மருத்துவமனை, தாய் சேய் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் புதிய இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனது சேவைகள் பல்வேறு பிரிவினருக்கும் தேவை. ஆகவே புதிய கட்டடங்களால் பக்க சார்பு இன்றி அனைவரும் சேவைகளைப் பெற்றுக் கொள்வது அவசியம்.
ஒரு பிரிவினரின் நலன் கருதி கட்டடங்கள் அமைக்கும்போது அதை ஏனையவர்கள் பயன்படுத்த முடியாமல் போகின்றது. அவ்வாறான இடங்களில் அமைக்கப்படும் கட்டடங்களால் பயன் ஏதும் இல்லை. ஆகவே புதிய இடங்களில் கட்டடங்களை அமைக்கும்போது அது பற்றிய தகவல்களை பிரதேச செயலகரின் ஊடாக அதனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்க வேண்டும். இதன்போது பல்வேறு தரப்பினரின் கருத்துக்களும் பெறப்படும். அதன் பின்னர் பொருத்தமான இடங்களில் கட்டடங்களை அமைக்கும்போது அது பயனுள்ளதாக அமையும். இது தவிர சட்ட ரீதியாக உடைமையாக்கப்படாத காணிகளையும் தெரிவு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
Related posts:
|
|