சுகாதார அமைச்சருக்கு கல்வியின் தரம் பற்றிய பொறுப்பில்லை – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
Tuesday, September 19th, 2017
சகல புத்திஜீவிகளின் கருத்துக்களை நிராகரித்து சைட்டம் தனியார் மருத்துவக்கல்லூரியை பாதுகாக்க சில அரசியல்வாதிகள் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமந்த ஆனந்த இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இங்கிலாந்து மருத்துவச் சபை சைட்டம் மருத்துவக்கல்லூரியை அங்கீகரிக்க முடியாது எனக் கூறும் போது சுகாதார அமைச்சர் அதனை நியாயப்படுத்தி கருத்து வெளியிடுகிறார்.
சுகாதார அமைச்சருக்கு நாட்டின் மருத்துவ கல்வியின் தரம் சம்பந்தமாக எந்த பொறுப்பும் இல்லை எனவும் சமந்த ஆனந்த குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ராஜா கொலுரே இது குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.
சைட்டம் பிரச்சினை காரணமாக சில காலமாக நாட்டின் மருத்துவ துறை அதளபாதாளத்திற்குள் விழுந்துள்ளது. இந்த பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதை அரசாங்கம் தொடர்ந்தும் புறந்தள்ளி வருகிறது எனவும் ராஜா கொலுரே குற்றம் சுமத்தியுள்ளார்.
Related posts:
|
|
|


