சீரழிக்கும் போதைப்பொருள் கடத்தலில் இருந்து சமூகத்தை விடுவிக்க புதிய சட்டங்களை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை!
Sunday, November 13th, 2022
இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப்பொருள் கடத்தலில் இருந்து சமூகத்தை விடுவிக்க புதிய சட்டங்களை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, சமூகப் பேரிடராக மாறியுள்ளஐஸ் போதைப்பொருள் 5 கிராமை ஒருவர் வைத்திருந்தால், அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐஸ் போதைக்கு அடிமையானவர்கள் கடுமையான மனநோயாளிகளாக மாறியுள்ளதாக விசேட மனநல மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆக்கிரமித்துள்ள ஹெரோயின், கொக்கெய்ன், ஐஸ் போன்ற போதைப் பொருட்களுக்கு இந்நாட்டில் இளைஞர் சமூகம் அதிகளவில் அடிமையாகி வருகின்றது.
போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்துக்கும் அதிகமாகும் என போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ்.இந்துவின் மாணவன் பல்கேரியா பயணம்!
சிகரெட்டினி விலை 5 ரூபாவால் அதிகரிப்பு – அடுத்த வருடம்முதல் 8 பில்லியன் ரூபா வருமானத்தை எதிர்பார்த்த...
அரசியல் கைதிகள் 27 பேர் விரைவில் விடுவிக்கப்படுவர் - நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
|
|
|


