சீரற்ற காலநிலை – யாழ். மாவட்டத்தில் 85 குடும்பங்களைச் சேர்ந்த 298 பேர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜா தெரிவிப்பு!

Saturday, December 16th, 2023

சீரற்ற காலநிலை காரணமாக யாழ். மாவட்டத்தில் 85 குடும்பங்களைச் சேர்ந்த 298 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 83 குடும்பங்களை சேர்ந்த 291 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த வருடத்தின் இது வரையான காலப்பகுதியில், பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி , இந்த ஆண்டில் இது வரையான காலப்பகுதியில் 76,086 பேர் டெங்கு நோய்த் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு 16,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், மேல் மாகாணத்தில், 35,807 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் காணப்படுமாயின் அவற்றை சுத்தமாக வைத்திருக்குமாறு பொதுமக்களிடம் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: