சீரற்ற காலநிலை – யாழ்ப்பாண மாவட்டத்தில் 14 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் பாதிப்பு – மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் தகவல்!
Friday, December 31st, 2021
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 14 குடும்பங்களை சேர்ந்த 37 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அத்தோடு சிரற்ற காலநிலையால் 5 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ரி.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் சேத விபரங்கள் தொடர்பில் குறித்த பிரதேச செயலகத்தினூடாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு கொழும்பு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யால தேசிய பூங்கா மூடப்படுகிறது!
பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம்; தொடர்பாடல் தகவல்களை வழங்கியவருக்கு இலஞ்சம் வழங்கியமை வெளியானது!
பாதிக்கப்பட்டுள்ள வியாபார நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிப்பு!
|
|
|


