சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு சீன ஜனாதிபதியிடமிருந்தும் புத்தாண்டு வாழ்த்து!

சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி, அவர் எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவருடன் தூதுக்குழுவொன்றும் நாட்டை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட சீன உர கப்பல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சீன ஜனாதிபதி ஸீ ஜிங்பிங் (Xi Jinping), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹோங் இந்த வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதியிடம் கையளித்ததாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
Related posts:
கடந்தாண்டு 1560,10 மி.மீ.மழை இவ்வாண்டு 700 மி.மீ. மட்டுமே!
சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிப்பு - மூன்று பேரை உடனடியாக கைது செய்யுமாறு சட்டத்தரணிகள் ...
இலங்கையில் கடவுச்சீட்டு விநியோகத்தில் கடுமையாகும் கட்டுப்பாடு - மக்களுக்கு விடப்பட்டது முக்கிய அறிவி...
|
|