சீன அரசாங்கத்தின் உதவியோடு மருந்து பரிசோதனைக்காக ஆய்வுகூடம்!

மருந்து பரிசோதனைக்காக சீன அரசாங்கத்தின் உதவியோடு தர ஆய்வுகூடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஆளனி வள அபிவிருத்தி மீது அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. மருந்து வகைகளை வர்த்தக நாமங்களை விற்பனை செய்வதற்கு பதிலாக மருந்தின் மூலப்பெயருடன் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் மூன்றாவது புற்றுநோய் மருந்தை தருவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இது நாட்டில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மருந்து வகைகளை விட விலை குறைந்ததாகும். இதற்கு தேவையான ஆலோசனைகள் தேசிய ஒளடத அதிகார சபைக்கு வழங்கப்படவுள்ளன. களுத்துறை, மாத்தறை. அனுராதபுரம், காலி தாதியர் பயிற்சிக் கல்லூரிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Related posts:
அர்ஜுன் அலோசியஸ் கைது!
யாழ் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட முதலாம் கட்ட தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவு - மக்கள் குழப்பமடைய தேவைய...
|
|