சீன அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு 780 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி – நாட்டின் அந்நிய செலாவணி சந்தையும் ஸ்திரமடைவதாக நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டு!

Tuesday, August 31st, 2021

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை மேலும் பலப்படுத்துவதற்காக, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து, பணமாக மாற்றக்கூடிய S.D.R எனப்படும் விசேட மீள்செலுத்துதல் உரிமைகளின்படி, 780 மில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேலதிகமாக 300 மில்லியன் டொலர் கடன் அடிப்படையிலும் வழங்கவுள்ளது.

சீன அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்டுள்ள குறித்த கடன் தொகையானது, இன்று நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமது ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், இந்த நிதி கிடைப்பதன்மூலம், நாட்டின் அந்நிய செலாவணி சந்தையின் பணப்புழக்கமும், ஸ்திரத்தன்மையும் பரிமாற்ற விகிதத்தின் மூலம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை

இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 90 சதம், விற்பனை பெறுமதி 204 ரூபா 89 சதமாகவும்

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 276 ரூபா 81 சதம், விற்பனை பெறுமதி 288 ரூபா 36 சதமாகவும்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235 ரூபா 58 சதம், விற்பனை பெறுமதி 244 ரூபா 43 சதமாகவும்

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 82 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 90 சதமாகவும் எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: