சீனி இறக்குமதியில் மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களிடம் இருந்து பணத்தை மீள பெறுவதற்கு உடனடி நடவடிக்கை – அரசாங்க நிதிப்பற்றிய குழு அறிவுறுத்து!.
Friday, January 19th, 2024
2020ஆம் ஆண்டில் சீனி இறக்குமதியின் போது, மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களிடம் இருந்து பணத்தை மீள பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க நிதிப்பற்றிய குழு அறிவுறுத்தியுள்ளது.
நிதியமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு, இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, சீனி இறக்குமதிக்கான விசேட வியாபாரப் பண்ட வரியில் 99.5 சதவீதம் குறைக்கப்பட்ட போதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது குறித்து அரசாங்க நிதிப்பற்றிய குழு முன்னதாக அதிருப்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
விரைவில் மாற்றம் அடையும் இலங்கையில் நிலப்பரப்பு!
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முதலாவது சர்வதேச மாநாடு!
அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பில் 6ஆம் திகதி நாடாளுமன்ற விவாதம்!
|
|
|


