சீனியின் விலை 4 ரூபாவால் உயர்வு!

Friday, September 1st, 2017

ஒரு கிலோ சீனியின் விலை 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், 101 ரூபாவாக இருந்த 1 கிலோ சீனியின் விலை 105 ரூபாவாக அதிகரித்துள்ளது.

சீனி விலை அதிகரிப்பிற்கு முன்னர் அதன் கொள்வனவு விலை 100 ரூபாவாகக் காணப்பட்டது.

உலக சந்தையில் சீனியின் விலை குறைந்த சந்தர்ப்பத்தில் 8 வீத வர்த்தக வரி விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வர்த்தக வரி அதிகரிப்பினால், இலங்கையில் சீனியின் விலையை அதிகரிக்கக்கூடாது என சீனி இறக்குமதியாளர்களிடம் வாழ்க்கைச் செலவுக்குழு கோரியிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் சீனி இறக்குமதி சங்கத்திடம் கேட்ட போது, சீனியின் மொத்த விலை மாத்திரமே அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Related posts: