சீனா செல்லத் தயாராகிறார் ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – சீனக் கப்பல் சர்ச்சைக்கும் தீர்வு கிட்டும் எனவும் எதிர்பார்ப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக சீனா செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் அவரது குறித்த அவரது விஜயத்திற்கு முன்னதாக தற்போது எழுந்துள்ள சீனக் கப்பலான ‘யுவான் வான் 5’ தொடர்பான சிக்கல் நிலைமையும் தீர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுவாக, நாட்டில் ஜனாதிபதியானதும் அரச தலைவர் முதலாவதாக அண்டை நாடான இந்தியாவுக்குச் செல்வது வழமையாக இருக்கும். ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது முதல் விஜயமாக சீனாவை தெரிவு செய்ததின் பின்னணியில் அவர் சர்வதேச சமூகத்திற்கு முக்கிய அரசியல் செய்தியை சொல்ல முனைவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நல்லூரில் விவரீதம்: தீயினுள் வீழ்ந்த பெண் வைத்தியசாலையில்!
ஜெய்ப்பூர் நிறுவனத்திற்கு விடுமுறை!
இஷட் புள்ளி இன்றையதினம் இணையத்தளத்தில் வெளியாகும் - பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவ...
|
|