சீனாவிடமிருந்து மருந்துகளை கொள்வனவு செய்யவுள்ள இலங்கை!

Sunday, March 29th, 2020

அரசாங்கத்துக்கு அரசாங்கம் என்ற விசேட திட்டத்தின்கீழ் இலங்கை இந்தியாவிடம் இருந்து அவசிய மருந்துகளை இறக்குமதி செய்யவுள்ளது.

இலங்கை மருத்துவத்துறையிடம் ஏற்கனவே 3 மாதங்களுக்கு தேவையான மருத்துவப்பொருட்கள் மற்றும் மருந்துகள் கையிருப்பில் உள்ளன.

எனினும் அதற்கடுத்த மூன்று மாதங்களுக்கும் மருந்துப்பொருட்களை கையிருப்பில் வைத்துக்கொள்ள சுகாதாரத்துறை விரும்புகிறது.

எனவே இந்தியாவிடமும் சீனாவிடமும் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப்பிரிவின் உதவிப்பணிப்பாளர் ஏடி சுதர்சன தெரிவித்துள்ளார்.

Related posts:


சூரிய சக்தி மின் உற்பத்தித் திட்டங்களை மேம்படுத்துவதற்கு இந்தியா உதவி – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெர...
கல்வி முறையில் மாற்றம் - திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு...
அடுத்த தேர்தல்வரை நிலையான அரசாங்கத்தை உறுதி செய்வதே பொதுஜன பெரமுனவின் கடமை - மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்...